
தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை சமீபத்தில் நிதியமைச்சர் மரியா வில்சன் வெளியிட்டு இருந்தார். இப்படியான சூழ்நிலையில், தமிழக மின்சார துறையின் தற்போதைய நிதிநிலை மற்றும் கடந்த கால நிர்வாக முறைகேடுகள் குறித்த தனி வெள்ளை அறிக்கை ஒன்றை அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் அறிவித்து இருக்கிறார். ஏற்கனவே, வெளியான நிதிநிலை வெள்ளை அறிக்கையின் சூடே குறையாத நிலையில், தற்போது இந்த அறிக்கையும் வெளிடப்படுவதால் கடந்த காலத்து புள்ளிகள் தலையில் இடியை இறக்கியுள்ளது.2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிப் பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக விஜய் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற மறுகணமே முதலமைச்சராக அவர் சொன்ன வார்த்தை தமிழ்நாட்டின் தற்போதைய நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை கூடிய விரைவில் வெளியிடப்படும் என்பது தான். இதை சொன்னதுமே குறிப்பாக முந்தைய ஆட்சியை சேர்ந்தவர்களுக்கு பலருக்கும் தூக்கி வாரி போட்டுவிட்டது.2021 ஆம் ஆண்டில் சுமார் ரூ. 5.13 லட்சம் கோடியாக இருந்த மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை, 2026 ஆம் ஆண்டில் அதாவது தவெக அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு வரை ரூ. 10 லட்சம் கோடியாக உயர்ந்தது தான் இந்த வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கான முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது. முதலமைச்சர் விஜய் கூறியது போலவே, கடந்த 16 ஜூன் 2026 அன்று தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரியா வில்சன் வெளியிட்டு இருந்தார்.அந்த வெள்ளை அறிக்கையில் அரசின் வரவு செலவு கணக்குகள், நிதி நிலை, கடந்த திமுக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் இடம்பெற்று இருந்தன. இதுமட்டுமின்றி, ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு கடன் இருக்கிறது என்பது பற்றியும் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தன. அப்போது, தமிழ்நாடு மின்வாரிய குழுமத்திற்கு ரூ. 2,47,130 கோடி கடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்படியான சூழ்நிலையில், தமிழக மின்சார துறையின் தற்போதைய நிதிநிலை மற்றும் கடந்த கால நிர்வாக முறைகேடுகள் குறித்த தனி வெள்ளை அறிக்கையை அடுத்த வாரத்தில் வெளியிடப்போவதாக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் அறிவித்துள்ளார்.அதன்படி, தமிழக மின்சாரத் துறையில் கடந்த காலங்களில் என்னென்ன மாயாஜாலங்கள் அரங்கேறி இருக்கின்றன என்பதை ஒட்டுமொத்தப் பொதுமக்களும் தெரிந்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
