
போராடும் கர்நாடகா - எதிர்க்கும் தமிழ்நாடு
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. காவிரியின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் புதிய அணை ஒன்றை கட்டுவதற்காக கர்நாடக அரசு போராடி வருகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இப்படியான சூழ்நிலையில், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ரூ. 15 ஆயிரம் கோடியில் புதிய திட்ட அறிக்கை
இதையடுத்து, பெங்களூரு குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்தி பயன்பாட்டுக்காக கட்டுவதற்கு ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் பூமிபூஜை நடத்தப்பட உள்ளதாகவும் கர்நாடக அரசு தெரிவித்தது. மேலும், அந்த திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திடமும் தாக்கல் செய்தது.
தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு
இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், தடுத்து நிறுத்தக் கோரியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் சமீபத்தில் கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதைத்தொடர்ந்து, மற்ற 2 மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் திட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்று டெல்லிக்கு சென்றபோதும் பிரதமரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
மேகதாது அணைக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்
இதற்கிடையில், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் கர்நாடகாவை விட தமிழ்நாட்டிற்குத்தான் அதிகளவு பலன் கிடைக்கும். எனவே, மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவிப்பதாக கர்நாடகா முதலமைச்சர் டி. கே. சிவக்குமார் கூறியிருந்தார். இப்படி இருக்கையில், கடந்த 19 ஜூன் 2026 அன்று நிறைவேற்றப்பட்டது.
மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் நிலைபாடு
தமிழ்நாடு அரசின் தீர்மானத்திற்கு பிறகும், மேகதாது அணை விவகாரத்தில் கடலுக்கு செல்லும் உபரியாக செல்லும் நீரை மட்டுமே சேமித்து மக்களுக்கு பயன்படுத்த கர்நாடகா அரசு முயற்சி செய்கிறது. மேலும், கர்நாடகா எல்லைக்குள் தான் அணை கட்டப்படுகிறது. எனவே, மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
கர்நாடகா முதலமைச்சருக்கு சவால் விட்ட முன்னாள் சிஎம்
இந்த நிலையில் தான், கர்நாடகாவின் தற்போதைய முதலமைச்சர் டி. கே. சிவக்குமாருக்கு ஒரு சவாலை விடுத்துள்ளார். அதாவது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியதை சுட்டிக்காட்டி, உண்மையாகவே டி. கே. சிவக்குமார் கர்நாடகாவின் முதலமைச்சர் என்றால் தவெகவுக்கான ஆதரவை திரும்பப்பெறுமாறு காங்கிரஸ் மேலிடத்திடம் வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார்.
தவெக - காங்கிரஸ் கூட்டணியை உடைக்க திட்டமா?
ஏனென்றால், டி. கே. சிவக்குமார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கியமான தலைவர்களில் ஒருவர். தமிழ்நாட்டில் தவெக அரசுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது. மேகதாது அணை விவகாரத்தை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் தவெக - காங்கிரஸ் கூட்டணியை பிரிக்க பாஜக திட்டமிடுவதாக சொல்லப்படுகிறது. காங்கிரஸை பொறுத்துவரை தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இரண்டுமே முக்கியம். எனவே, மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸின் தலையீடு நடுநிலையாகவே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
