பாஸ்போர்ட் குடியுரிமைகான ஆவணம் இல்லையா?
அப்போது இந்திய குடியுரிமைக்கான ஆவணமாக பாஸ்போட்டை கருத முடியாது என தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்திய குடிமக்களுக்கே பாஸ்போர்ட் வழங்கப்பட்டாலும், அதன் முதன்மை நோக்கம் சர்வதேச பயணங்களை எளிதாக்குவதாகும். நாட்டில் பாஸ்போர்ட் சேவைகள் கடந்த சில ஆண்டுகளாக வேகமாக விரிவடைந்து வருகின்றன. அந்த வகையில் கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1.39 கோடி பேருக்கு வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் காவல்துறை சரிபார்ப்பு நிறைவடைந்த பிறகு பெரும்பாலான விண்ணப்பதாரர்களுக்கு ஆறு வேலை நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் நடைமுறை தற்போது செயல்பாட்டில் உள்ளது.
இந்தியா முழுவதும் வெறும் 77 பாஸ்போர்ட் சேவை மையங்கள்
ஒரு ஆண்டிற்கு முன்பு இந்தியா முழுவதும் வெறும் 77 பாஸ்போர்ட் சேவை மையங்கள் மட்டுமே செயல்பட்டு வந்தன.ஆனால், சேவைகளை மக்களுக்கு எளிதில் கொண்டு சேர்க்கும் நோக்கில் அவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்த்தப்பட்டு தற்போது 545 ஆக அதிகரித்துள்ளது.இதற்கிடையில், யை நிரூபிப்பது தொடர்பாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். பொதுவாக பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் குடியுரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் போன்றவை குடியுரிமைக்கான முக்கிய ஆதாரங்களாக கருதப்படுகின்றன. இந்த ஆவணங்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முதன்மை சான்றுகளாக பயன்படுத்தப்படுகின்றன.
பாஸ்போர்ட் வழங்கும் முறையில் மாற்றங்கள்
அதே நேரத்தில், பாஸ்போர்ட் வழங்கும் முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.அதிகாரிகள் குறிப்பிட்டனர். விண்ணப்பித்த பிறகு மிகக் குறுகிய காலத்திலேயே பாஸ்போர்ட் வழங்கப்படும் நிலை உருவாகியுள்ளது. பல இடங்களில் ஐந்து வேலை நாட்களுக்குள் பாஸ்போர்ட் கிடைப்பதாகவும், மையங்களில் காத்திருக்கும் நேரம் பெருமளவில் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.நாட்டில் தற்போது வழங்கப்படும் புதிய பாஸ்போர்ட்களில் மின்னணு சிப் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சிப் மூலம் பயணிகளின் தகவல்கள் பாதுகாப்பாக சேமிக்கப்படுவதுடன், சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ஆவண மோசடிகளை கட்டுப்படுத்தவும், வெளிநாட்டு எல்லைச் சோதனைகளை விரைவாக மேற்கொள்ளவும் உதவும் என தெரிவிக்கப்பட்டது.
பாஸ்போர்ட் சேவையை எளிதாக பெறும் வகையில் சிறப்பு முகாம்கள்
பாஸ்போர்ட் சேவை மையங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் புதிய மையங்களை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. தொலைதூர கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களும் பாஸ்போர்ட் சேவையை எளிதாக பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.வெளிநாடுகளில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளை நாடும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பாஸ்போர்ட் சேவைகளை மேலும் விரிவுபடுத்துவது அரசின் முக்கிய இலக்காக உள்ளது. இதனுடன், வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு, பயிற்சி மற்றும் நலத்திட்டங்களும் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.இந்தியர்களின் சர்வதேச பயணங்களை எளிதாக்குவதோடு, பாதுகாப்பான மற்றும் ஒழுங்குமுறையான இடம்பெயர்வை உறுதி செய்வதற்கான பல நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

