மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் பாகிஸ்தான், சௌதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து ஒரு புதிய ராணுவ கூட்டணியை உருவாக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த சக்திவாய்ந்த கூட்டமைப்பில் அண்டை நாடான ஈரானும் இணையுமா என்ற கேள்வி சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த கூட்டணியில் இணைவது குறித்து ஈரான் தனது முக்கிய நிலைப்பாட்டையும் நிபந்தனையையும் வெளிப்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இதுபோன்ற பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஈரானும் எகிப்தும் தவிர்க்க முடியாத சக்திகளாகும். எனவே, வெறும் சாதாரண உறுப்பினர்களாக இல்லாமல், ‘இணை நிறுவன உறுப்பினர்களாக’ தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது.
அதாவது, ராணுவ கூட்டணியின் ஒப்பந்தங்கள் மற்றும் கொள்கை ஆவணங்கள் உருவாக்கப்படும்போதே ஈரானின் கருத்துக்களுக்கும் யோசனைகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாகும். ஈரானின் இந்த நிபந்தனை, சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.