நேபாள வெள்ளப் பெருக்கு: சீனா உரிய நேரத்தில் எச்சரிக்கவில்லையா? சர்வதேச அளவில் வெடிக்கும் புதிய சர்ச்சை!

நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட பேரழிவு வெள்ளப் பெருக்கு குறித்து சீனா உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுக்கத் தவறிவிட்டதாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இந்த வெள்ளத்திற்கான மூலக் காரணம் குறித்து சீன அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாக நேபாள அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெள்ளப் பெருக்குக்கான தெளிவான காரணத்தைக் கூறும் நிலையில் தற்போதைக்கு சீன அதிகாரிகளும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், இந்த அசம்பாவிதத்தின் தொடக்கம் நேபாளப் பகுதியில் அமைந்திருந்ததா அல்லது திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்டதா என்பதும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. எல்லையோரப் பகுதிகளில் ஏற்படும் இயற்கை பேரிடர்கள் குறித்த தகவல்களை இரு நாடுகளும் உடனுக்குடன் பகிர்ந்துகொள்வது வழக்கம் என்ற நிலையில், சீன தரப்பிலிருந்து சரியான நேரத்தில் எச்சரிக்கை தகவல்கள் வராதது நேபாள மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் ராஜதந்திர மட்டத்தில் புதிய சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top