நேபாள-திபெத் எல்லையில் பேரழிவு! பனிப்பாறை உடைந்து உருவான திடீர் பெருவெள்ளம் – செயற்கைக்கோள் வெளியிட்ட அதிர்ச்சி படங்கள்!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இமயமலைக் தொடரில் திடீரென ஏற்பட்ட பனிப்பாறை சரிவு, அப்பகுதியில் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பனிப்பாறை உடைந்ததால் உருவான கட்டுக்கடங்காத திடீர் பெருவெள்ளம், தன் வழியில் இருந்த அணைகள், பாலங்கள் மற்றும் வாகனங்களை அடியோடு அடித்துச் சென்றுள்ளது.

இந்தக் கொடூர வெள்ளப் பெருக்கில் பேருந்துகள் மற்றும் கட்டடங்கள் அடித்துச் செல்லப்படும் பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இமயமலையில் ஏற்பட்ட இந்த இயற்கைச் சீற்றத்தால் உருவான சேதங்களின் பாதையை, செயற்கைக்கோள் புகைப்படங்களின் உதவியுடன் பிபிசி வெரிஃபை குழு விரிவாக ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளது.

காலநிலை மாற்றத்தின் காரணமாக இமயமலைப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகுவதும் சரிவதும் அதிகரித்து வரும் நிலையில், இந்த திடீர் வெள்ளப்பெருக்கு அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top