உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யப் படைகள் கையாளும் புதிய தாக்குதல் உத்திகளால் உக்ரைன் தலைநகர் கீவ் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வான்வழித் தாக்குதல் குறித்த எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்ட பிறகு, மக்கள் தங்களின் உயிரைப் பாதுகாக்கப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வெறும் 4 நிமிடங்கள் மட்டுமே அவகாசம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
இரவு நேரத்தில் இடைவிடாது நடத்தப்படும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் மக்கள் நிம்மதியாகத் தூங்க முடியாத அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு எச்சரிக்கை அடங்குவதற்குள் அடுத்த தாக்குதல் எச்சரிக்கை ஒலிப்பதால், இரவு முழுவதையும் மக்கள் மிகுந்த திகிலுடன் கழித்து வருகின்றனர். தொடர் தாக்குதல்கள் காரணமாக, உறக்கமின்றி மக்கள் மறுநாளில் ஜாம்பிகளைப் போல நடமாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் இந்தத் தொடர் வான்வழித் தாக்குதல் உத்தி, கீவ் நகர மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் நிலைகுலைக்கச் செய்துள்ளது.