இனி ‘ஸ்மார்ட் கார்டு’ கிடையாது! செப்டம்பர் 15 முதல் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி டிஜிட்டல் மயம்: தமிழக அரசு அதிரடி!

தமிழகத்தில் போக்குவரத்து சேவைகளை அதிநவீனமாக்கும் வகையில், வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம் (Driving Licence) மற்றும் வாகனப் பதிவு சான்றிதழ் (RC Book) உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துத் துறை சார்ந்த ஆவணங்களும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளன. இனி காகிதம் அல்லது பிளாஸ்டிக் கார்டு வடிவில் ஆவணங்கள் எதுவும் வழங்கப்படாது என தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்த புதிய நடைமுறையின்படி, இனி வாகன ஓட்டிகள் தங்களின் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களை மத்திய அரசின் ‘பரிவாஹன்’ இணையதளம், ‘டிஜிலாக்கர்’ (DigiLocker) மற்றும் ‘எம்-பரிவாஹன்’ செயலிகள் மூலம் டிஜிட்டல் முறையில் எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். வாகன சோதனையின் போது அதிகாரிகளிடம் இந்த டிஜிட்டல் ஆவணங்களைக் காண்பித்தாலே முழுமையாகச் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்கள் அச்சிடப்படுவதில் நிலவி வந்த காலதாமதத்தைத் தவிர்க்கவும், பொதுமக்களுக்கு விரைவான சேவை வழங்கி வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி ஓட்டுநர் உரிம அட்டைக்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பது வாகன ஓட்டிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top