தேர்தலில் போட்டியிடாமல் கோடிகளில் நன்கொடை: போலி அரசியல் கட்சிகளின் பின்னணியில் நடப்பது என்ன? அதிரடி புலனாய்வு!

தேர்தல் களத்தில் பெயரளவில் கூட போட்டியிடாத சில அரசியல் கட்சிகள், ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் நன்கொடைகளைப் பெற்று வருவது பிபிசியின் புலனாய்வு செய்தியில் அம்பலமாகியுள்ளது. மக்கள் நலனுக்காகவும் தேர்தல் செலவுகளுக்காகவும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் வழங்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட பல கட்சிகள் தேர்தல் அரசியலில் சுறுசுறுப்பாக இயங்காமலேயே, பிரம்மாண்டமான நிதிப் புழக்கத்தைக் கொண்டுள்ளன.

இந்தக் கட்சிகள் தங்களுக்கு வரும் கோடிக்கணக்கான நிதியைத் தொடர்ந்து பல்வேறு வழிகளில் செலவிட்டும் வருகின்றன. ‘தேர்தலிலும் போட்டியிடாமல், மக்களுடனும் நிற்காமல் இயங்கும் இந்தக் கட்சிகள் உண்மையிலேயே அரசியல் அமைப்புகள்தானா? அல்லது கருப்புப் பணத்தைச் சட்டபூர்வமாக மாற்றும் ஷெல் நிறுவனங்களுக்கான முகமூடிகளாகச் செயல்படுகின்றனவா?’ என்ற அடுக்கடுக்கான கேள்விகள் இந்த ஆய்வின் மூலம் எழுந்துள்ளன. தேர்தல் ஆணையம் இது குறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top