தாயின் ஆடைக்குள் தப்பிய குழந்தை: 14 ஆண்டு பிரிட்டிஷ் குடும்ப படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!

பிரான்ஸ் நாட்டில் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பிரிட்டிஷ் குடும்ப படுகொலை சம்பவம், உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒன்று. நீண்ட காலமாக எவ்வித தடயமும் இன்றி மர்மமாகவே நீடித்து வந்த இந்த வழக்கில், தற்போது ஒரு எதிர்பாராத புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலுள்ள ஏரி ஒன்றில் இருந்து ‘லூகர்’ (Luger – மாடல் A) ரகப் பழமையான கைத்துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கி மூலம் படுகொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் யார் என்பது குறித்த புதிய துப்புகள் கிடைக்கக்கூடும் எனப் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக நம்புகின்றனர்.

14 ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்தப் பயங்கரத் தாக்குதலின் போது, தாய் ஒருவர் தன் உயிரைக் கொடுத்து, தனது ஆடைக்குள் குழந்தையை மறைத்து வைத்துப் காப்பாற்றிய சோக நிகழ்வு உலகையே உலுக்கியது. தற்போது கிடைத்துள்ள இந்த முக்கியத் தடயம், பல ஆண்டு காலப் புதிரை அவிழ்த்து குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பை மீண்டும் அதிகரித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top