பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள உலகின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஈபிள் கோபுரம் திடீரென மூடப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈபிள் கோபுரத்தைப் பார்வையிட வந்த இந்து மதத் தூதுக்குழு ஒன்றின் வருகையை முன்னிட்டு, அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர்கள் தற்காலிகமாகப் பணியிடத்திலிருந்து மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நிர்வாகத்தின் இந்த பாலினப் பாகுபாடு நடவடிக்கையைக் கண்டித்து, ஈபிள் கோபுர ஊழியர்கள் உடனடியாகத் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். இதன் காரணமாக ஈபிள் கோபுரம் உடனடியாக மூடப்பட்டது. உலகெங்கிலும் இருந்து கோபுரத்தைக் காண வந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நுழைய முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
பணியிடத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், தங்களின் சுயமரியாதையைக் குறைக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் பாரீஸில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.