இந்தியாவின் பிரம்மோஸை வீழ்த்துமா பாகிஸ்தானின் புதிய வான் பாதுகாப்பு? சீனா, துருக்கி உதவியுடன் உருவான அதிநவீன அரண்!

பாகிஸ்தான் ராணுவம், சீனா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் தொழில்நுடப் உதவியுடன் புதிய பல அடுக்கு வான் பாதுகாப்பு அரணை (Multi-layered Air Defence System) உருவாக்கியுள்ளது. எல்லைப் பகுதிகளில் அதிகரித்து வரும் நவீன வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த பாதுகாப்பு கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தியாவின் அதிவேக ‘பிரம்மோஸ்’ (BrahMos) சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளைத் தடுக்கும் திறன் இந்த புதிய அமைப்பிற்கு இல்லை என்று பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பிரம்மோஸ் ஏவுகணைகளின் பிரம்மாண்ட வேகமும், குறைந்த உயரத்தில் ரேடாரில் சிக்காமல் பறந்து சென்று இலக்கைத் தாக்கும் தொழில்நுட்பமும் பாகிஸ்தானின் புதிய அமைப்புகளுக்கு மிகப்பெரிய சவாலாகவே தொடர்கிறது.

அதேவேளையில், எல்லைப் பகுதிகளில் இயக்கப்படும் நவீன ட்ரோன்கள் மற்றும் சிறிய ரக வான்வழி தாக்குதல்களைக் கண்டறிந்து அழிப்பதில் இந்த அமைப்பு பாகிஸ்தானுக்கு ஒரு வலுவான அரணாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனா மற்றும் துருக்கியின் இந்த கூட்டு ராணுவ நடவடிக்கை தெற்காசியப் பிராந்தியத்தில் பாதுகாப்பு குறித்த புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top