ரகசிய உணவு… மெய்க்காப்பாளர்கள் படை! புதினின் இரும்புக்கோட்டை பாதுகாப்பு வளையம் உடைக்க முடியாததா?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பாதுகாப்பு வளையம் எப்போதுமே உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் ஒரு சுவாரசியமான விஷயமாகும். உலகின் மிகவும் பலம் வாய்ந்த தலைவர்களில் ஒருவரான புதினைச் சுற்றி, யாராலும் ஊடுருவ முடியாத அளவுக்கு அதிநவீன இரும்புக்கோட்டை போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதின் சாப்பிடும் உணவுகள் மிகவும் ரகசியமான முறையில் தயாரிக்கப்பட்டு, நச்சுப் பரிசோதனை நிபுணர்களால் முழுமையாகச் சோதிக்கப்பட்ட பிறகே அவருக்குப் பரிமாறப்படுகின்றன. வெளிநாடுகளுக்குச் செல்லும்போதும் கூட, தனது சொந்த சமையல்கலைஞர்கள் மற்றும் உணவுப் பரிசோதனையாளர்களையே அவர் உடன் அழைத்துச் செல்கிறார்.

மேலும், ‘ஃபெடரல் புரொடக்டிவ் சர்வீஸ்’ (FSO) என்ற சிறப்புப் படையைச் சேர்ந்த மெய்க்காப்பாளர்கள் 24 மணி நேரமும் அவரைக் கண் இமைக்காமல் கண்காணித்து வருகின்றனர். புதின் பயணிக்கும் வழிகளில் பல போலி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு எதிரிகள் குழப்பப்படுகிறார்கள். நவீன தொழில்நுட்பங்கள், குண்டுதுளைக்காத கேடயங்கள் மற்றும் பிரத்யேக ஆயுதங்களுடன் கூடிய இந்த பாதுகாப்பு அமைப்பைத் தாண்டி புதினை அணுகுவது கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒன்றாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top