செளதி அரேபியா: மரண தண்டனை நிறைவேற்றப்படும் வெளிநாட்டினரின் உடல்கள் ஒப்படைக்கப்படாதது ஏன்? அதிர்ச்சித் தகவல்கள்!

உலகிலேயே அதிக எண்ணிக்கையில் மரண தண்டனைகளை நிறைவேற்றும் நாடுகளில் செளதி அரேபியா முன்னணி இடங்களில் உள்ளது. அந்நாட்டின் கடுமையான சட்டத் திட்டங்களின்படி குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் நபர்களுக்கு மரண தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

சமீபத்திய அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, செளதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக அந்நாட்டிற்குச் சென்றவர்கள் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு இத்தகைய தண்டனைகளைப் பெறுகின்றனர்.

இருப்பினும், தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, அந்த வெளிநாட்டினரின் உடல்கள் அவர்களின் சொந்த ஊரில் உள்ள குடும்பத்தினரிடம் வழக்கமாக ஒப்படைக்கப்படுவதில்லை. செளதியிலுள்ள கடுமையான நிர்வாக நடைமுறைகள் மற்றும் அந்நாட்டுப் பாரம்பரியச் சட்ட விதிகள் காரணமாகவே உடல்கள் குடும்பத்தாரிடம் வழங்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் கவலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top