நடுரோட்டில் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்து கொடூரத் தாக்குதல்: ஊர்க்காவல் படை வீரர் அதிரடி கைது!

சமூக வலைதளங்களில் சீருடை அணிந்த அதிகாரி ஒருவர் பெண்ணை கொடூரமாகத் தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் பெண்ணுடன் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், திடீரென ஆத்திரமடைந்து அவரது தலைமுடியைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்று கீழே தள்ளுவதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பரவி பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

வீடியோவின் பின்னணி குறித்து உடனடியாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சம்பவத்தில் ஈடுபட்டது ஊர்க்காவல் படை வீரர் என்பதை உறுதி செய்தனர். பொது இடத்தில் பெண்ணுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஊர்க்காவல் படை வீரரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சட்டத்தைக் காக்க வேண்டிய காவல்துறை சார்ந்த அதிகாரியே பெண்ணை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top