ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்திர கூட்டத் தொடரில் பொதுவாக அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசு நாடுகளின் தலைவர்கள் பேசுவதுதான் சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படும். ஆனால், இந்த முறை அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா (பாலேன் ஷா).
ஐ.நா. உரையின் போது, வல்லரசு நாடுகளின் இராணுவப் போக்கையும், உலக அமைதி குறித்த அவர்களின் இரட்டை நிலையையும் சுட்டிக்காட்டி அவர் பேசிய வார்த்தைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. “உலகில் மனிதநேய உதவிகள் தாமதமானாலும், போர் ஏவுகணைகள் மட்டும் சரியான நேரத்தில் வந்து சேர்கின்றன” என்ற அவரது சாட்டையடி உரை சர்வதேச அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
வல்லரசுகளின் செயல்பாடுகளை உலகளாவிய மேடையில் அஞ்சாமல் சுட்டிக்காட்டிய நேபாள பிரதமரின் இந்தத் துணிச்சலான பேச்சுக்குத் தற்போது உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சிறிய நாடாக இருந்தாலும், நீதிக்காக ஒலித்த நேபாளத்தின் இந்த உரத்த குரல், சர்வதேச அரசியலில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.