பூமி எதிர்கொண்டு வரும் தீவிர காலநிலை மாற்றத்தின் காரணமாக, இயற்கை அமைப்பில் பல விசித்திரமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, தாவரங்களின் பூக்கும் மற்றும் காய்க்கும் பருவச் சுழற்சியில் இயல்புக்கு மாறான மாறுதல்கள் தென்படத் தொடங்கியுள்ளன. வழக்கமாக மே மாதத்தில் மட்டுமே பூக்கக்கூடிய ‘மேஃபிளவர்’ பூக்கள் தற்போது செப்டம்பர் மாதத்திலும் பூத்துக் குலுங்குவதும், குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்கும் கொடுக்காப்புளி பருவம் தாண்டி தாராளமாகக் கிடைப்பதும் இதன் தெளிவான சான்றுகளாகும்.
மழைப்பொழிவு மாற்றம், வெப்பநிலையின் ஒழுங்கற்ற உயர்வு போன்ற காரணங்களால் தாவரங்கள் தங்கள் வாழ்வியல் சுழற்சியை மாற்றிக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இத்தகைய காலம் தவறிப் பூக்கும் தாவரங்கள் குறித்து விரிவான அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வது தற்போதைய அவசிய தேவையாக உருவெடுத்துள்ளது. மேலும், எதிர்கால உணவுப் பாதுகாப்பையும் சுற்றுச்சூழல் சமநிலையையும் உறுதி செய்ய, மாறுபடும் காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரக்கூடிய புதிய தாவர ரகங்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு ஊக்கமளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.