நடுவானில் விமானிகளுக்கு இடையே பயங்கர சண்டை: சவூதியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இஸ்ரேல் விமானம்!

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கிப் புறப்பட்ட ‘ஃப்ளைதுபை’ (Flydubai) பயணிகள் விமானம், புதன்கிழமை காலை நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென சவூதி அரேபியாவிற்குத் திருப்பி விடப்பட்டு அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானம் இயங்கிக் கொண்டிருந்தபோது, அதன் விமானிகளுக்கு இடையே திடீரெனக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது சண்டையாக மாறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானிகளின் இந்த எதிர்பாராத மோதலால் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தவிர்க்கும் வகையில், விமானம் உடனடியாக சவூதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

நடுவானில் பயணிகள் உயிருடன் விளையாடும் வகையில் விமானிகள் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் பயணிகள் இடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து ஃப்ளைதுபை விமான நிறுவனம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. தவறிழைத்த விமானிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top