பிரிட்டனில் இல்லாத இரண்டு குழந்தைகள் பிறந்ததாகக் கூறி, தனது முன்னாள் துணையிடம் இருந்து சுமார் 38 லட்சம் ரூபாயைப் பறித்த பெண்ணின் விசித்திர மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. லண்டன் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்தப் பெண், தான் கர்ப்பமாக இருப்பது போன்ற போலியான அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் படங்கள், குழந்தைகள் பிறந்தது போல் சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் குழந்தைகள் அழும் ஒலிப்பதிவுகளை (Audio Clips) தொடர்ந்து அனுப்பி, தனது முன்னாள் துணையை முழுமையாக நம்ப வைத்துள்ளார். இதனைப் பயன்படுத்தி, பராமரிப்புச் செலவு என்ற பெயரில் அவரிடமிருந்து சிறுகச் சிறுக ரூ.38 லட்சம் வரை பறித்துள்ளார்.
ஆனால், சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், உண்மையில் அப்படி இரண்டு குழந்தைகளே பிறக்கவில்லை என்பதும், அனைத்தும் அதிநவீன மோசடி என்பதும் அம்பலமானது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, இது மிகவும் “அசாதாரணமான” மற்றும் “மிகவும் விரிவாகத் திட்டமிடப்பட்ட ஏமாற்று நடவடிக்கை” என்று வர்ணித்துள்ளார். காதலின் பெயரால் நடந்த இந்த நூதன மோசடி தற்போது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.