அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற சுமார் 500-க்கும் மேற்பட்ட மரண தண்டனை நிறைவேற்றங்களை செய்தியாளராக நேரில் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் மைக்கேல் கிராசிக் என்ற மூத்த நிருபர்.
பிரபல சர்வதேச செய்தி நிறுவனமான ‘அசோசியேட்டட் பிரஸ்’ (AP) அமைப்பில் நீண்ட காலம் பணியாற்றிய மைக்கேல், கடந்த 2018-ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். எனினும், டெக்சாஸ் சிறைகளில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும் நிகழ்வுகள் குறித்த செய்திகளைச் சேகரித்து பதிவு செய்வதை அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.
தமது நீண்டகாலப் பணிக்காலத்தில் குற்றவாளிகளுக்கு நச்சு ஊசி மூலம் மரண தண்டனை அளிக்கப்பட்டதை மிக அருகில் இருந்து பார்த்த இவர், ‘என் வாழ்நாளில் 500-க்கும் மேற்பட்ட மரண தண்டனைகளைப் பார்த்துள்ளேன்; ஆனால் சில சம்பவங்களை என்னால் என்றும் மறக்க முடியாது’ எனத் தெரிவித்துள்ளார். கைதிகளின் கடைசி வார்த்தைகள், அவர்களின் உணர்வுகள் மற்றும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் தருணங்கள் குறித்து இவர் வெளியிட்ட தகவல்கள் உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.