தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெற்றி பெறப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் இந்த வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் இதுவாகும். இதனால், தவெக அரசின் 4 மாத கால ஆட்சிப் பணிகளுக்கான முக்கிய மதிப்பீடாகவும், மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும் முதல் அக்னிப்பரீட்சையாகவும் இத்தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகின்றன.
ஆளுங்கட்சியான தவெக, எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவிய நிலையில், தேர்தல் முடிவுகள் தவெக அரசின் அரசியல் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.