டெல்லி விமான நிலையத்தில் அதிரடி கைது! 3 சிஜேபி தலைவர்கள் எங்கே? தொடரும் மர்மம்!

டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மூன்று பேர் காவல்துறை தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான அபிஜித் திப்கே, சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோர் டெல்லி விமான நிலையத்தில் வைத்து அதிரடியாக காவலில் எடுக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த போதே, காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றுள்ளதாக காக்ரோச் ஜனதா கட்சி (CJP) தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், தற்போது அவர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளார்கள், எந்த அடிப்படையில் கைது செய்யப்பட்டார்கள் என்ற விவரங்களை காவல்துறை இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

காவலில் எடுக்கப்பட்ட 3 தலைவர்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து தகவல்கள் ஏதும் இல்லாததால், அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் கவலையும் நிலவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து டெல்லி காவல்துறையிடம் இருந்து விரைவில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top