தலைநகர் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) சார்பாக பிரம்மாண்ட போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு டெல்லி காவல்துறை மற்றும் மத்தியப் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வீரர்கள் முக்கியப் பகுதிகளில் தீவிரப் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக நாடாளுமன்ற வளாகம், முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து எல்லைகளிலும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு, நகருக்குள் நுழையும் முக்கிய சாலைகளில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் படையினரின் இந்தத் திடீர் கெடுபிடிகளால் டெல்லியின் பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரின் நிலவரத்தை தீவிரமாகக் கண்காணித்து வரும் காவல்துறை உயரதிகாரிகள், பொதுமக்கள் அனைவரும் அமைதி காத்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.