ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை நிறுத்திய டிரம்ப்: இந்தியாவுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் அமெரிக்காவின் அதிரடி முடிவு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யா மீது விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கடுமையான பொருளாதார தடைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்காகத் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளார். டிரம்ப்பின் இந்த திடீர் அதிரடி முடிவு, சர்வதேச வர்த்தக அரங்கில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய அரசுக்கு இது பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

முன்னதாக, அமெரிக்காவின் வர்த்தகத் தடைகளை மீறி செயல்படும் நாடுகள் மீது 100 சதவீதம் வரை அபாரத வரி விதிக்க வகை செய்யும் சட்ட விதிகள் குறித்து கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன. குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் பெருமளவில் கச்சா எண்ணெய் மற்றும் ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்து வரும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இது பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது டிரம்ப் ரஷ்யா மீதான தடைகளை நிறுத்தி வைத்துள்ளதால், அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் மற்றும் கூடுதல் வரி அச்சுறுத்தலிலிருந்து இந்தியா முழுமையாக தப்பியுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் எரிசக்தி தேவைகளுக்கான இறக்குமதி வர்த்தகம் எவ்வித பாதிப்புமின்றி தொடர்ந்து சுமுகமாக நடைபெறும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top