சௌதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இருவரும் கடந்த 2023-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்கள் என்று வங்கதேச வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஷமா ஒபைத் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
சௌதி அரேபியாவில் தீவிர குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அந்நாட்டுச் சட்டப்படி கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சௌதியில் உள்ள வங்கதேசத் தூதரகம் மூலமாக, தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் சட்ட ரீதியான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில் இளைஞர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இந்தச் சம்பவம் வங்கதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.