தமிழ் திரையுலகில் தனது கம்பீரமான குரலால் ரசிகர்களைக் கட்டிப்போட்ட பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் (75) இன்று (அக்டோபர் 22) காலை காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த அவரது மறைவு, தமிழ் திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘காதல் கோட்டை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’ மற்றும் ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ போன்ற சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் கிருஷ்ணராஜ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அருணாச்சலம்’, கார்த்தியின் ‘பருத்திவீரன்’ உட்பட பல்வேறு வெற்றித் திரைப்படங்களில் 300-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இசைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரையைப் பதித்துள்ளார்.
தனது கிராமிய மணம் கமழும் குரலாலும், துள்ளலான பாடல்களாலும் ரசிகர்களை மகிழ்வித்த இவரது மறைவுக்குத் திரை பிரபலங்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் இணையதளங்கள் வாயிலாகத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.