‘சிபாரிசில் வந்தவன் என மூத்த வீரர் திட்டினார்… குளியலறையில் கதறி அழுதேன்’ – இன்சமாம் உல் ஹக் உருக்கம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சிறந்த பேட்ஸ்மேனுமான இன்சமாம் உல் ஹக், தனது ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். அணிக்குள் நுழைந்த புதிதில், மூத்த வீரர் ஒருவர் தம்மிடம் ‘நீ பரிந்துரையின் (சிபாரிசு) பேரில் தான் அணியில் இடம் பிடித்திருக்கிறாய்’ என்று கூறி கடுமையாக சாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வார்த்தைகள் தனது மனதை மிகவும் காயப்படுத்தியதாகவும், அதனால் குளித்துக் கொண்டிருந்த நேரம் முழுவதும் கதறி அழுதுகொண்டே இருந்ததாகவும் இன்சமாம் மிகவும் உருக்கத்துடன் கூறியுள்ளார். ஆரம்பத்தில் இத்தகைய விமர்சனங்களைச் சந்தித்த போதிலும், பின்னர் தனது அதிரடி ஆட்டத்தால் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக அவர் உருவெடுத்தார்.

இன்சமாமின் அபாரமான ஆட்டத்தைக் கண்டு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோர் பலமுறை அவரைப் பாராட்டியுள்ளனர். சச்சின் இவரை ‘அமைதியான அதேசமயம் ஆபத்தான பேட்ஸ்மேன்’ என்றும், கங்குலி ‘போட்டியின் போக்கை எப்போது வேண்டுமானாலும் மாற்றக்கூடிய மிகச்சிறந்த ஆட்டநாயகன்’ என்றும் புகழ்ந்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top