தம்பியின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற அண்ணனே கொலையாளி! சௌதியில் இருந்து வந்ததாக நாடகமாடிய நபர் சிசிடிவியில் சிக்கியது எப்படி?

பாகிஸ்தானின் குஜராத் நகரில் சொத்துப் பங்கீடு தொடர்பான தகராறில், உடன் பிறந்த தம்பியை அண்ணனே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையைச் செய்த அண்ணன், எதுவும் அறியாதவர் போலவும், சௌதி அரேபியாவில் இருந்து தம்பியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அவசர அவசரமாக நேராக வந்தது போலவும் நடித்தது காவல்துறையினரை வியப்பில் ஆழ்த்தியது.

தம்பியின் உடலைப் பார்த்து கதறி அழுத அண்ணனின் நாடகம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. கொலையின் பின்னணியைக் கண்டறிய காவல்துறையினர் சம்பவ இடத்தைச் சுற்றியிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது, கொலை நடந்த நேரத்தில் அண்ணன் சௌதி அரேபியாவில் இருக்கவில்லை என்பதும், அவரே நேரில் வந்து தம்பியைக் கொலை செய்துவிட்டு தப்பியதும் அம்பலமானது.

சொத்துக்காகக் கூடப்பிறந்த தம்பியைக் கொன்றுவிட்டு, இறுதிச் சடங்கிலும் பங்கேற்று தப்பிக்க முயன்ற அண்ணனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top