தம்பியை கொன்றுவிட்டு இறுதிச்சடங்கில் நாடகமாடிய அண்ணன்: சிசிடிவி ஆதாரத்தால் அம்பலமான கொடூரம்!

பாகிஸ்தானின் குஜராத் பகுதியில் சொத்துப் பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட தகராறில், உடன் பிறந்த தம்பியையே கொடூரமாகக் கொலை செய்த அண்ணன், காவல்துறையின் அதிரடி விசாரணையால் சிசிடிவி காட்சிகளின் உதவியோடு சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட தம்பியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, தான் சௌதி அரேபியாவில் இருந்து அவசரமாகப் பறந்து வந்ததாகக் கூறி, அந்த அண்ணன் அஞ்சலி செலுத்தி போலி அனுதாபம் காட்டி நாடகமாடியுள்ளார். எனினும், இக்கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த காவல் துறையினருக்கு, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகள் திருப்புமுனையாக அமைந்தன.

சௌதி அரேபியாவில் இருப்பதாகக் கூறிய அண்ணன், கொலை நடந்த சமயத்தில் அப்பகுதியிலேயே நடமாடியது சிசிடிவி காட்சிகளில் துல்லியமாகப் பதிவாகியிருந்தது. இந்த ஆதாரத்தின் அடிப்படையில் காவல் துறையினர் அவரைக் கைது செய்து நடத்திய தீவிர விசாரணையில், சொத்து ஆசையில் தம்பியைக் கொலை செய்துவிட்டு சௌதியில் இருந்து வந்ததாக நாடகமாடியதை அவர் ஒப்புக்கொண்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top