குஜராத் மாநிலம் கிர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள வளதார் கிராமத்தில், தினமும் சிங்கங்கள் மற்றும் சிறுத்தைகள் சுதந்திரமாக உலா வருவதால் கிராம மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். சமீபத்தில் இந்த கிராமத்தில் நபர் ஒருவர் சிங்கத் தாக்குதலுக்கு இரையாகி உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய சிங்கங்களின் புகலிடமாக விளங்கும் கிர் வனப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில், வனவிலங்குகளின் நடமாட்டம் இயல்பான ஒன்றாக இருந்தாலும், தற்போதைய தொடர் தாக்குதல்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளன. குறிப்பாக, இருட்டிய உடனே பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களுக்குச் செல்லவும், குழந்தைகள் வெளியே விளையாடவும் கடும் அச்சமடைகின்றனர். வனத்துறையினர் உடனடியாகத் தலையிட்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வளதார் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.