இஸ்ரேல் அரசியல் களம் மீண்டும் கொந்தளிப்பான சூழலை எட்டியுள்ளது. வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் மற்றும் அரபு அமைப்புகளுக்குப் பின்னால் கத்தார் மற்றும் துருக்கி நாடுகளின் நிதியுதவி இருப்பதாக அதிர்ச்சி குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டை முன்வைத்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
நெதன்யாகுவின் இந்த கருத்துக்கு இஸ்ரேலின் முன்னணி எதிர்க்கட்சித் தலைவரான காடி ஐசன்கோட் மற்றும் அரபு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேர்தலில் ஏற்படப்போகும் தோல்வி பயத்தின் காரணமாகவே நெதன்யாகு இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்பி, மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயல்கிறார் என அவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். வெளிநாடுகளின் தலையீடு குறித்த இந்த சர்ச்சை இஸ்ரேலிய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.