“என் மகளுக்காகத் தாயகம் செல்ல வேண்டும்!” – தண்டனை முடிந்தும் திருச்சி முகாமில் தவிக்கும் உகாண்டா பெண்!

திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டுச் சிறைவாசிகளின் நிலை குறித்துத் தொடர் விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், தண்டனைக் காலம் முடிந்தும் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வரும் உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண்ணின் சோகக் கதை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திருச்சி சிறப்பு முகாமில் பணியில் இருந்த காவலர்களை மிரட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், உகாண்டா பெண்ணை திருச்சி நீதிமன்றம் தற்போது குற்றமற்றவர் என அறிவித்து விடுதலை செய்துள்ளது. இருப்பினும், தன் மீது அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்படுவதால், சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் முகாமிலேயே தொடர்வதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய அப்பெண், “எனக்கான தண்டனைக் காலம் முடிந்துவிட்டது. உகாண்டாவில் உள்ள எனது மகளைப் பார்க்க நான் உடனடியாகத் தாயகம் செல்ல வேண்டும். ஆனால், புதிய வழக்குகள் மூலம் எனது பயணம் முடக்கப்படுகிறது” என கண்ணீருடன் தெரிவித்துள்ளார். நீதிமன்ற விடுதலைக்கு பிறகும் தாய்நாடு திரும்புவதில் நிலவும் சட்டச் சிக்கல்கள் அப்பெண்ணை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top