“என் மகளைப் பார்க்க வேண்டும்…” – தண்டனை முடிந்தும் தாயகம் திரும்ப முடியாமல் திருச்சி முகாமில் தவிக்கும் உகாண்டா பெண்!

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள காவலர்களை மிரட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண்ணை நீதிமன்றம் அண்மையில் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. எனினும், தனது தண்டனைக் காலம் முழுமையாக முடிவடைந்த பின்னரும், சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் திருச்சி முகாமிலேயே அடைக்கப்பட்டுள்ளதாக அவர் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அப்பெண் கூறுகையில், “எனது சிறு வயது மகளைப் பிரிந்து இங்குத் தவித்து வருகிறேன். என் மகளுக்காக நான் உடனடியாக உகாண்டா செல்ல வேண்டும். ஆனால், தண்டனை காலம் முடிந்த பிறகும் என் மீது அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்படுவதால் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகிறேன்” என்று கண்ணீர் மல்கக் தெரிவித்துள்ளார்.

தண்டனைக் காலம் முடிந்த பிறகும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் சிறப்பு முகாம்களில் தொடர்ந்து வைக்கப்படுவது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மனிதநேய அடிப்படையில் அரசு தலையிட்டு தன்னைத் தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அப்பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top