விசா மறுப்பால் வந்த வினை! பசிபிக் தீவில் 3 ஆண்டுகளாக தவிக்கும் இலங்கை பெண்: உருக்கமான பின்னணி!

சொந்த நாட்டிற்குத் திரும்ப முடியாமல், பசிபிக் பெருங்கடலில் உள்ள சிறிய குக் தீவில் (Cook Islands) கடந்த மூன்று ஆண்டுகளாக இலங்கை பெண் ஒருவர் தவித்து வரும் மனதை உருக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த 50 வயதான ருச்சிரா ரணசிங்கே என்பவரே இவ்வாறு தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் துயர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குக் தீவுக்குச் சென்ற ருச்சிரா, மீண்டும் தனது சொந்த ஊரான இலங்கைக்குத் திரும்ப முடிவு செய்தார். இருப்பினும், அவர் பயணம் மேற்கொள்வதற்குத் தேவையான இடைமுறை போக்குவரத்து விசா (Transit Visa) அவருக்குக் கிடைக்கவில்லை. அத்துடன், பயணப் பாதையில் உள்ள நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அவருக்கு விசா வழங்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்துவிட்டன.

இதனால், முறையான போக்குவரத்து வசதிகள் மற்றும் சர்வதேச விசா அனுமதிகள் இன்றி, சுற்றிலும் பெருங்கடலால் சூழப்பட்ட சிறிய தீவிலேயே அவர் கடந்த 3 ஆண்டுகளாக முடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு சிறிய முடிவாலும், சர்வதேச விசா நடைமுறைச் சிக்கல்களாலும் தவித்து வரும் இவரை பாதுகாப்பாக மீட்க தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top