
திமுக கூட்டணியில் மதிமுக இருக்கிறதா?
அப்போது திமுக கூட்டணி இருக்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டியது திமுக தலைமை தான்.இடதுசாரி இயக்கங்களின் செயலாளர்கள், "திமுக கூட்டணி இல்லை" என தெரிவித்துள்ள கருத்துக்கு நான் பதில் சொல்ல முடியாது. எங்களுடைய முடிவை நாங்கள் மதிமுக பொதுக்குழுவில் முடிவெடுப்போம்.விஜயின் வருகையால் இரண்டு திராவிட கட்சிகளுக்கும் சிறிய பாதிப்பு இருக்கும் என தான் நினைத்தோம். ஆனால், மக்களிடம் மௌன புரட்சி நடந்துள்ளது.உள்ளிட்டஅனைத்து கட்சிகளும் தங்களுடைய தோல்விக்கு காரணம் என்ன என்பது பற்றி தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மக்களை முட்டாள் என சொல்லி புறந்தள்ளாமல் உரிய ஆய்வை செய்ய வேண்டும்.விஜயின் முகத்துக்காக கிடைத்த வெற்றி தான் இது.
இரு திராவிட கட்சிகளுக்கும் மக்கள் பாடம் புகட்டினர்
தொடர்ந்து பேசியவர், கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பாக பணியாற்றிய உறுப்பினர் உள்ளிட்டோரும் தோற்றுள்ளனர்.1967ல் நடந்ததை போலவே இப்போது இரு திராவிட கட்சிகளின் ஊழல், முறைகேடுக்கு எதிராக இந்த தேர்தலில் மக்கள் புரட்சி செய்துள்ளார்கள்.மேலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிருஷ்டம் என நான் சொன்னதை வைத்து fake narrative செய்யப்படுகிறது. அடிப்படை ஜனநாயகத்தின்படி கூட்டணி கட்சிகள் தங்களின் சொந்த சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் சொன்னேன்.
உதயசூரியன் சின்னம் குறித்து துரை வைகோவின் கருத்து...
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள் என திமுக சொல்லும் போது நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறியிருந்தால் அதையும் நாங்கள் வேறு எதையோ எதிர்பார்த்து போவதாக தவறாக தான் பேசியிருப்பார்கள். மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறைகளில் நீண்ட காலமாக பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இந்த துறைகளில் உள்ள சிக்கலையெல்லாம் உடனே சரி செய்ய முடியாது. இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காண தமிழக அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுக்கு 20 வருடங்களுக்கு மேலாக மின்சாரத் துறையில் சீர்திருத்தம் செய்யாதது கூட காரணமாக இருக்கலாம் என்று கூறினார்.
