
சமீபத்தில் கீழ், அமெரிக்கா தனது கடமைகளை செய்ய தவறிவிட்டதாகவும், தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் வரம்பை மீறி தாக்குதல் நடத்தியதாகவும் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக அறிவித்து இருக்கிறது.உலகெங்கிலும் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் நிறுத்தத்திற்கான அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் ஆகியோர் சமீபத்தில் கையெழுத்திட்டனர். அவர்களைத் தொடர்ந்து, அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதிக்கு உத்தரவாதம் கொடுக்கும் நபராக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருந்தார்.இதையடுத்து, நாளை (21 ஜூன் 2026) சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் நகரில் அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தத்தின் இறுதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதில், அமெரிக்கா மற்றும் ஈரானியப் பிரதிநிதிகளும், பாகிஸ்தான் மற்றும் கத்தார் மத்தியஸ்தர்களும் கலந்துக் கொள்வார்கள். மேலும், அடுத்தக்கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்வதே இந்தப் பேச்சுவார்த்தைகளின் நோக்கம் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து இருந்தது.இந்த நிலையில், இன்று இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனான் மீது குண்டுவீச்சு தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கிடையில், ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா ஒரே இரவில் 50க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவ படைகள் மீது வீசியதாகவும், அதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. சமீபத்திய இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதலில் மட்டும் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,000-ஐத் தாண்டிவிட்டதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் போர் நிறுத்தம் இறுதி கட்டத்தை எட்டவுள்ள நிலையில், இஸ்ரேலின் தாக்குதல் மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தை தூண்டியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலின் தாக்குதலை சுட்டிக்காட்டி அறிவித்துள்ளது. இந்த உத்தரவை மீறி கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை நெருங்கினால் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடையாது என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது.எதிரியின் வாக்குறுதி மீறலுக்குப் பதிலடியாகவே இந்த முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்ந்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என்றும் ஈரானின் உயர்மட்ட கூட்டு இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஒருவழியாக ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வந்துவிடும், கூடிய சீக்கிரம் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து வழக்கமாக நடைபெறும்.இதனால், விரையில் கச்சா எண்ணெய், எரிபொருள் உள்ளிட்ட பொருட்களின் விலை குறையும் என்று ஆசிய நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இஸ்ரேல் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் சீர்குலைத்து உள்ளது. மேலும், உலகளாவிய பொருளாதார நெருக்கடி பற்றிய கவலையை தூண்டியுள்ளது.
