52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
சிறிதளவு உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை: வீழ்ச்சி கண்ட பங்குகள்

இன்று உள்நாட்டு மிதமான உயர்வுடன் நேர்மறையாக நிறைவடைந்தது. வாரத்தின் முதல் வர்த்தக அமர்வில் பிஎஸ்இ சென்செக்ஸ் 291.17 புள்ளிகள் (0.38 %) உயர்ந்து 77,094.07 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேவேளையில், என்எஸ்இ நிஃப்டி 50 குறியீடு 89.80 புள்ளிகள் (0.37 %) என்ற சிறிய உயர்வுடன் 24,102.90 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 77,325.56 புள்ளிகளையும், நிஃப்டி 24,168.05 புள்ளிகளையும் எட்டியிருந்தன. இருப்பினும், இந்த முக்கிய குறியீடுகள் இரண்டும் அந்த உயர்வைத் தக்கவைக்க முடியாமல் ஆரம்பத்தில் பெற்ற லாபத்தை இழந்தன.

ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகளில் பெரும் சரிவு!

இன்று சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள 30 நிறுவனங்களில் 17 நிறுவனங்களின் லாபத்துடன் நேர்மறையாகவும், மீதமுள்ள 13 நிறுவனங்களின் பங்குகள் இழப்புடன் எதிர்மறையாகவும் நிறைவடைந்தன. மறுபுறம், நிஃப்டி 50 குறியீட்டில் உள்ள 50 நிறுவனங்களில், 27 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே லாபத்துடன் நேர்மறையாக நிறைவடைந்தன. மீதமுள்ள 23 நிறுவனங்களின் பங்குகளும் இழப்புடன் எதிர்மறையாக நிறைவடைந்தன. சென்செக்ஸ் நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டெக் மஹிந்திராவின் பங்குகள் இன்று அதிகபட்சமாக 1.87 சதவீத உயர்வுடன் நிறைவடைந்தன. அதேவேளையில், ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் இன்று அதிகபட்சமாக 2.15 சதவீத சரிவுடன் நிறைவடைந்தன.சன் பார்மா மற்றும் ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் ஏற்றம் கண்டன. இன்று லாபத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்த மற்ற சென்செக்ஸ் நிறுவனப் பங்குகளில் சன் பார்மா (1.87 %), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (1.31 %), இன்ஃபோசிஸ் (1.29 %), பிஇஎல் (1.01 %), பஜாஜ் ஃபின்சர்வ் (0.89 %), ஹெச்டிஎஃப்சி வங்கி (0.79 %), கோடக் மஹிந்திரா வங்கி (0.63 %), பஜாஜ் ஃபைனான்ஸ் (0.60 %), எஸ்பிஐ (0.57 %), பார்தி ஏர்டெல் (0.41 %), ஐசிஐசிஐ வங்கி (0.36 %), மாருதி சுஸுகி (0.15 %), ஆக்சிஸ் வங்கி (0.12 %), அல்ட்ராடெக் சிமெண்ட் (0.11 %), டிசிஎஸ் (0.04 %) மற்றும் டாடா ஸ்டீல் (0.03%) ஆகியவை அடங்கும்.

இழப்புடன் வர்த்தகத்தை நிறைவு செய்த பங்குகள்!

இன்று டைட்டன் (1.11 %), பவர் கிரிட் (0.87 %), ட்ரெண்ட் (0.78 %), ஐடிசி (0.75 %), எடர்னல் (0.53 %), ஹிந்துஸ்தான் யூனிலீவர் (0.49 %), அதானி போர்ட்ஸ் (0.35 %), எல் & டி (0.28 %), மஹிந்திரா & மஹிந்திரா (0.18 %), ஹெச்சிஎல் டெக் (0.16 %), இண்டிகோ (0.08 %) மற்றும் என்டிபிசி (0.07 %) ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. இந்த பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் இழப்பு இன்று ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *