பாகிஸ்தான்-சௌதி-துருக்கி ராணுவ கூட்டணி: இணைய இரான் போட்ட கெடுபிடி நிபந்தனை!

பாகிஸ்தான், சௌதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து புதிய ராணுவக் கூட்டணியை அமைப்பது தொடர்பான ஆலோசனைகள் தீவிரமடைந்து வருகின்றன. இந்த வலுவான சர்வதேச கூட்டணியில் இரான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளும் இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த அமைப்பில் இணைவதற்கு இரான் மிக முக்கியமான நிபந்தனை ஒன்றை முன்வைத்துள்ளது.

இது குறித்து வெளியாகி உள்ள தகவலின்படி, ‘இத்தகைய சக்திவாய்ந்த ஒப்பந்தங்களில் இரான் மற்றும் எகிப்து போன்ற முக்கிய நாடுகள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். ஆனால், வெறுமனே சாதாரண உறுப்பினராக இணையாமல், இணை நிறுவன உறுப்பினர்களாக (Co-founding members) நாங்கள் பங்கேற்க வேண்டும். அதாவது, கூட்டணியின் அடிப்படை விதிகள் மற்றும் கையெழுத்திடப்படும் அதிகாரப்பூர்வ ஆவணங்களை உருவாக்கும்போதே எங்கள் கருத்துகளுக்கும் யோசனைகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்’ என்று இரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் ஆசிய பிராந்தியத்தில் உருவாக்கப்பட்டு வரும் இந்த புதிய ராணுவக் கூட்டணி சர்வதேச அரசியலில் பெரும் உற்றுநோக்கலாக மாறியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top