2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றி க்ழகத் தலைவர் விஜயை ‘எதிர்கால பிரதமர்’ என அவருடைய கட்சியினர் முழக்கமிட்டு வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
முதலமைச்சர் நாற்காலியைத் தாண்டி, விஜயை தேசிய அளவிலான பிரதமர் வேட்பாளராக தவெக தொண்டர்கள் முன்னிறுத்தும் இந்த நகர்வை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. மாநில அரசியலில் முழுமையாக தடம் பதிக்கும் முன்பே, இத்தகைய தேசிய அளவிலான முழக்கங்களை எழுப்புவது தவெகவின் அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுவதாக காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், தமிழகத்தைத் தாண்டி தேசிய அளவில் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவும், கட்சித் தொண்டர்களை தீவிரமான உற்சாகத்தில் வைத்திருக்கவுமே தவெக இந்த வியூகத்தைக் கையாள்கிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதன் பின்னணியில் உள்ள உண்மை அரசியல் கணக்கு என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.