விழிஞ்சம் சர்வதேச துறைமுகம்
நவீன தானியங்கி வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த துறைமுகம் தற்போது ஆண்டுக்கு சுமார் 12 லட்சம் கண்டெய்னர்களை கையாளும் திறன் கொண்டதாக உள்ளது. சர்வதேச சரக்கு போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த துறைமுகம், வின் முக்கிய கடல்சார் வர்த்தக மையங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது.மேலும், திட்டத்தின் மீதமுள்ள கட்டுமானப் பணிகளும் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மூன்று கட்டங்களும் முழுமையாக நிறைவடைந்த பிறகு, ஆண்டுக்கு 45 லட்சம் கண்டெய்னர்கள் வரை கையாளும் திறனை இந்த துறைமுகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம்யில் விழிஞ்சம் துறைமுகம் முக்கிய பங்காற்றும் என கருதப்படுகிறது.
செயல்பாட்டுக்கு வந்து 2 ஆண்டுகளில் சாதனை
இந்த நிலையில் செயல்பாட்டுக்கு வந்து 2 ஆண்டுகளில் ஆயிரமாவது வர்த்தகக் கப்பலை வரவேற்று சாதனை படைத்துள்ளது.கேரளாவின் விழிஞ்சம் சர்வதேச துறைமுகம், சரக்கு கண்டெய்னர் கையாளும் திறனில் உலக அளவில் 83-வது இடத்தை பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் புதிய ஆழ்கடல் சரக்கு மாற்று மையமாக உருவாகி வரும் இந்த துறைமுகம், குறுகிய காலத்திலேயே வேகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 1,23,092 TEU (Twenty-foot Equivalent Unit) கண்டெய்னர்கள் கையாளப்பட்டுள்ளன. அதே மாதத்தில் 62 கப்பல்கள் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. மேலும் ஒரு மணி நேரத்தில் 30.12 கண்டெய்னர்களை ஏற்றி இறக்கும் திறனை பதிவு செய்து உலகத் தரத்துக்கு இணையான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் புதிய சரக்கு மாற்று மையம்
சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு செயல்படத் தொடங்கிய விழிஞ்சம் துறைமுகம் இதுவரை 950-க்கும் மேற்பட்ட கப்பல்களை கையாண்டுள்ளது. இதில் 67 மிகப்பெரிய சரக்கு கப்பல்களும் அடங்கும். உலகின் மிகப்பெரிய கண்டெய்னர் கப்பலாக கருதப்படும் MSC Irina மற்றும் ஆழமான வரைவு கொண்ட MSC Verona போன்ற கப்பல்களும் இங்கு தரையிறங்கியுள்ளன.அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனம் (APSEZ) வெளியிட்ட தகவலின்படி, 2025 ஆகஸ்ட் மாதத்தில் 10 லட்சம் சரக்குகளை TEU சரக்குகளை கையாண்ட சாதனையை எட்டிய விழிஞ்சம் துறைமுகம், அதன் பின்னர் மிகக் குறுகிய காலத்தில் 20 லட்சம் சரக்குகளை TEU-ஐ கடந்துள்ளது. 2024 ஜூலை மாதத்தில் சோதனை சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில், வெறும் 18 மாதங்களிலேயே இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.
உலக வர்த்தக நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்த துறைமுகம்
2025 மே மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்த இந்த துறைமுகம், தெற்காசியா, மேற்கு ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சரக்கு மையமாக வளர்ந்து வருகிறது.சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதைக்கு அருகில் அமைந்துள்ளதால், பயண நேரம் மற்றும் எரிபொருள் செலவை குறைக்க உதவுகிறது. இதனால் உலக வர்த்தக நிறுவனங்களின் கவனத்தை இந்த துறைமுகம் ஈர்த்துள்ளது.மேலும், ரூ.16,000 கோடி முதலீட்டில் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2028-க்குள் அவை நிறைவடைந்தால், சரக்கு கையாளும் திறன் மேலும் அதிகரித்து, இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளுக்கு விழிஞ்சம் துறைமுகம் முக்கிய மையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

