நேபாளத்தில் வரலாறு காணாத அளவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. திரிசூலி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கால் சுரங்கப்பாதைக்குள் நீர் சீறிப் பாய்ந்ததில், அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் பலர் சிக்கிக் கொண்டனர். இந்த பயங்கர விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நேபாள தொழிலாளி ஒருவர், தனது மறக்க முடியாத திகில் அனுபவத்தை பிபிசி ஊடகத்திடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் பேசுகையில், “சுரங்கப் பாதைக்குள்ளே வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென பெருக்கெடுத்து வந்த ஆற்றுநீர், என்னை சுமார் 20 நிமிடங்கள் வரை தொடர்ச்சியாக துரத்தியது. மரணத்தின் விளிம்பிற்கே சென்றுவிட்டதாகக் கருதிய தருணத்தில், மிகக் கடுமையான போராட்டத்திற்குப் பிறகே உயிர் தப்பினேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதனிடையே, நேபாளத்தில் நிலவி வரும் வெள்ள பாதிப்புகளில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும், ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.