9 மாத கர்ப்பம்… சிசேரியன் செய்ய வயிற்றைத் திறந்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி!

மகப்பேறு மருத்துவ உலகில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் வகையிலான அரிதான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 9 மாத நிறைமாத கர்ப்பிணி என்று கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை (சிசேரியன்) செய்தபோது அவரது கருப்பையில் குழந்தையே இல்லை என்பது தெரியவந்து அனைவரையும் உரைய வைத்துள்ளது.

மருத்துவத்துறையில் மிகவும் அரிதாக நிகழும் இந்த நிகழ்வு ‘சூடோசிசிஸ்’ (Pseudocyesis) அல்லது பொய் கர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட பெண் தனக்கு ஒன்பது மாதங்கள் நிறைவடைந்து விட்டதாகக் கூறி பிரசவ வலி தொடர்பாக மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரைப் பரிசோதித்து அறுவை சிகிச்சைக்கு உட்படுத்திய மருத்துவர்கள், வயிற்றைத் திறந்து பார்த்தபோது கருப்பையில் குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உளவியல் ரீதியான பாதிப்புகள் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக சில பெண்களுக்குத் தாம் உண்மையில் கர்ப்பமாக இருப்பதாகவே தோன்றும் நிலை ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த அரிதான மருத்துவ சம்பவம் குறித்து தற்போது தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top