தேர்தலில் போட்டியிடாமல் கோடிகளில் நன்கொடை: போலி அரசியல் கட்சிகள் போர்வையில் கருப்பு பண பரிமாற்றமா? பிபிசி புலனாய்வு!

தேர்தல் களத்தில் தீவிரமாகப் போட்டியிடாத பல அரசியல் கட்சிகளுக்கு, ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் நன்கொடைகள் குவிந்து வரும் அதிர்ச்சித் தகவல் பிபிசி புலனாய்வில் தெரியவந்துள்ளது.

நாட்டின் ஜனநாயக அமைப்பில் அரசியல் கட்சிகள் மக்கள் நலனுக்காகவும், தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவும் செயல்படுவது வழக்கம். ஆனால், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட சில கட்சிகள் அரிதாகவே தேர்தலில் களம் காண்கின்றன. இருந்தபோதிலும், அவற்றின் வங்கிக் கணக்குகளுக்குப் பல கோடி ரூபாய் நன்கொடையாக வந்து சேர்கிறது. அதுமட்டுமின்றி, அந்தப் பெருந்தொகையை அக்கட்சிகள் மிக விரைவாகச் செலவிட்டும் வருகின்றன.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் தீவிர கவலை தெரிவித்துள்ளனர். சுறுசுறுப்பான அரசியல் செயல்பாடுகளே இல்லாத இந்தக் கட்சிகளுக்கு இவ்வளவு பெரிய தொகைகள் எவ்வாறு கிடைக்கின்றன? உண்மையில் இவை அரசியல் இயக்கங்களா அல்லது சட்டவிரோதப் பணத்தைச் சட்டபூர்வமாக மாற்றுவதற்காகச் செயல்படும் ‘ஷெல்’ நிறுவனங்களின் முகமூடிகளா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. போலி அரசியல் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top