பெண் ஊழியர்கள் இடமாற்றம்? ஈஃபிள் கோபுரம் திடீரென மூடப்பட்ட பின்னணி!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் ஈபிள் கோபுரம் திடீரென மூடப்பட்டது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு வருகை தந்த ஒரு குறிப்பிட்ட இந்து மதத் தூதுக்குழுவின் வருகையை முன்னிட்டு, அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர்கள் தற்காலிகமாகப் பணியிடத்திலிருந்து மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், பெண் ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட பாகுபாட்டைக் கண்டித்தும் சக ஊழியர்கள் உடனடியாகத் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். ஊழியர்களின் இந்த அதிரடிப் போராட்டத்தால் ஈபிள் கோபுரத்தின் இயக்கம் முற்றிலுமாக முடங்கியது. இதனால் அங்கு வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான சர்வதேசச் சுற்றுலாப் பயணிகள் கோபுரத்தைப் பார்வையிட முடியாமல் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

பாலின சமத்துவத்திற்கு எதிராகச் செயல்பட்ட நிர்வாகத்தின் போக்கைக் கண்டித்து ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. உலகப் புகழ்பெற்ற ஒரு பொது இடத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top