சௌதி அரேபியா மீது ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களின்போது, அந்நாட்டுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘மெக்கா ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்ட பாகிஸ்தானும் துருக்கியும் ஏன் ராணுவ உதவியை உடனடியாக வழங்கவில்லை என்ற கேள்வி சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, உறுப்பு நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது மற்ற நாடுகள் ராணுவ உதவி செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
இருப்பினும், இந்த விவகாரத்தில் பாகிஸ்தானும் துருக்கியும் தங்களது ராணுவத்தை அனுப்பாமல் அமைதி காப்பதற்குப் பின்னால் முக்கியக் காரணங்கள் உள்ளன. இத்தாக்குதலின் போது கூட்டுப் ராணுவ நடவடிக்கையைத் தொடங்குவதற்கான சரியான சூழலோ அல்லது இரு நாடுகளுக்கும் பொதுவான ஒரு எதிரியோ களத்தில் இல்லை. ஹூத்தி கிளர்ச்சியாளர்களைத் தங்கள் நேரடி எதிரியாக இவ்விரு நாடுகளும் கருதாததால், தங்கள் நாட்டுப் படைகளை உடனடியாகச் செளதிக்கு அனுப்ப விரும்பவில்லை. இதன் காரணமாகவே, ஒப்பந்தம் அமலில் இருந்தபோதிலும், சர்வதேச வெளியுறவுக் கொள்கையைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தானும் துருக்கியும் ராணுவ தலையீட்டைத் தவிர்த்து மௌனம் சாதித்தன.