‘இன்ஸ்பெக்டர் கொலை மிரட்டல் விடுக்கிறார்’ – பேட்டியளித்த வாலிபர் மறுநாளே கொடூரக் கொலை: சென்னையில் பரபரப்பு!

சென்னை திருவொற்றியூர் காவல் நிலையத்தின் முன்பாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பிரதீப் ராஜ் என்பவர், காவல் ஆய்வாளர் ஒருவர் தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாகப் பகிரங்கக் குற்றம்சாட்டினார். ‘கடந்த எட்டாம் தேதி என்னை அழைத்த காவல் ஆய்வாளர், இரு தரப்பினர் மாறி மாறி வெட்டிக் கொள்ளப் போவதாகத் தகவல் வந்துள்ளது என்றார். அதற்கு ஆதாரம் உள்ளதா எனக் கேட்டதற்கு, என்னைக் கொன்று திருச்செந்தூர் கடலில் கரைத்துவிடுவதாக மிரட்டினார்’ என அவர் பரபரப்பான குற்றச்சாட்ட முன்வைத்தார்.

இந்நிலையில், காவல் துறை மீது புகாரளித்த மறுநாளே (செப்டம்பர் 9) இரவு, பிரதீப் ராஜ் சிலரால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளர் மீது குற்றம்சாட்டி பேட்டியளித்த அடுத்த நாளே வாலிபர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கொலையின் பின்னணியில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்துக் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top