கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் சீனா இடையே எல்லையில் கடுமையான பதற்றமும் தீவிர மனக்கசப்பும் நிலவி வந்தது. இந்நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியாவுடனான உறவைச் சீரமைக்க ஆர்வம் காட்டி வருவது சர்வதேச புவிசார் அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
உலகளாவிய புவிசார் அரசியலில் ஏற்பட்டு வரும் வேகமான மாற்றங்களும், சீன பொருளாதாரம் எதிர்கொண்டு வரும் கடுமையான சவால்களுமே சீனா தனது நிலப்பாட்டை மாற்றிக்கொள்ள முக்கியக் காரணம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சீனா உள்நாட்டில் வர்த்தக மந்தநிலையைச் சந்தித்து வரும் சூழலில், இந்திய சந்தையின் பிரம்மாண்டமான தேவையும் வர்த்தக உறவும் சீனாவிற்கு மிக அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது.
மேலும், அமெரிக்காவின் தீவிர பொருளாதாரக் கட்டுப்பாடுகள் மற்றும் சர்வதேச அழுத்தங்களைச் சமாளிக்க, ஆசிய பிராந்தியத்தில் அமைதியைப்பேண வேண்டிய கட்டாயத்திற்கு சீனா தள்ளப்பட்டுள்ளது. இதனால், தங்களின் சொந்தத் தேவைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கிலேயே, சீனா தற்போது இந்தியாவுடன் நெருங்கி வர முயல்வதாகப் புவிசார் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.