தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அதிரடி தளர்வுகள்! உயர்கல்வி மேம்படுமா? வணிகமாகுமா? வலுக்கும் எதிர்ப்பு!

தமிழ்நாட்டில் புதிய தனியார் பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதற்கான விதிகளில் இரண்டு முக்கிய தளர்வுகளை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மாநில அரசின் இந்த நடவடிக்கை கல்வித் துறையிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அரசின் இந்தச் சட்டத் திருத்தம் உயர்கல்வியை முற்றிலுமாகத் தனியார்மயமாக்குவதற்கு வழிவகுக்கும் என்று எதிர்க்கட்சிகள், மாணவர் மற்றும் ஆசிரியர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், இந்த விதிவிலக்குகள் ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளையும், தமிழகத்தின் அடித்தளமான சமூகநீதியையும் பெருமளவில் பாதிக்கும் என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்தத் தளர்வுகள் மூலம் புதிய முதலீடுகள் வந்து தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறை மேம்படுமா? அல்லது சாமானிய மக்களுக்கு உயர்கல்வி எட்டாக்கனியாகி மேலும் வணிகமயமாக்கப்படுமா? என்ற கவலைகளும் கேள்விகளும் கல்வி ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top