தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி வசூல் புகார்: அன்பில் மகேஷ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி வழக்கு!

பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்குத் தேவையான பல்வேறு அரசு அனுமதிகள் மற்றும் அங்கீகார சான்றிதழ்களை எவ்வித தடங்கலுமின்றி பெற்றுத் தருவதற்காக, சுமார் 100 கோடி ரூபாய் வரை முறைகேடாக வசூலிக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இப்புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, தற்போது அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவருக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது. கல்வித் துறையில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் இந்த பிரம்மாண்ட லஞ்சப் புகார் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top