10 ஆண்டு காத்திருப்புக்கு முடிவு! NSE வெளியிடும் வரலாற்றுச் சிறப்புமிக்க IPO: பங்குகளை வாங்குவது எப்படி?

இந்தியாவின் மிகப் பெரிய பங்குச் சந்தையான தேசிய பங்குச் சந்தை (NSE), முதன்முறையாக தனது சொந்த பொதுப் பங்கு வெளியீட்டை (IPO) கொண்டுவரத் தயாராகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சட்ட சிக்கல்கள் மற்றும் ஒழுங்குமுறை தடைகள் காரணமாக முடங்கிக் கிடந்த இந்த ஐபிஓ செயல்முறை, தற்போது மீண்டும் உயிர் பெற்றுள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மெகா ஐபிஓ-வில் பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் செயலில் உள்ள டிமேட் கணக்கை (Demat Account) வைத்திருக்க வேண்டும். வழக்கமான ஐபிஓக்களைப் போலவே, தங்களுக்கு விருப்பமான தரகு செயலிகள் (Brokerage Apps) அல்லது வங்கியின் யுபிஐ (UPI) வசதி மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம்.

கடந்த 2016-ஆம் ஆண்டிலேயே இதற்கான வரைவு அறிக்கையை என்.எஸ்.இ சமர்ப்பித்த போதிலும், ‘கோ-லொகேஷன்’ முறைகேடு வழக்கு மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி (SEBI) அனுமதி வழங்காமல் இருந்தது. தற்போது அனைத்து சிக்கல்களும் நிவர்த்தி செய்யப்பட்டு அனுமதி கைகூடி வருவதால், இந்திய பங்குச் சந்தை வரலாற்றிலேயே மிக முக்கிய மைல்கல்லாக இந்த ஐபிஓ பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top